டெல்லியில் ஆட்சியமைக்கப்போவது யார்..? நாளை வாக்கு எண்ணிக்கை

0 596

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

வாக்குப்பதிவு சதவீதம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதம் செய்தது அதிர்ச்சியளிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த 24 மணி நேரம் கழித்துதான் 62 புள்ளி 59 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்மாக அறிவித்தது.

தேர்தல் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடத்த சதி நடப்பதாகவும் அவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

ஆயினும் தேர்தல் ஆணையம் கெஜ்ரிவால் புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இரவு நேரம் என்பதாலும் தேர்தல் நடத்திய அதிகாரிகள் காலை முதலே மிகவும் ஓய்வின்றி இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்பது அடிப்படையற்றது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments