அமெரிக்காவில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலம்

0 682

திரைத்துறையினருக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.

92 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு யாருக்கு ஆஸ்கர் என்ற எதிர்பார்ப்புடன் உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

ஜோக்கர் திரைப்படம் 11 பரிந்துரைகளை பெற்று சிறந்த படங்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளது. அடுத்த இடத்தில் 1917, The Irishman , Once Upon A Time In Hollywood ஆகிய திரைப்படங்கள் பத்து பரிந்துரைகளை பெற்றன. தென் கொரிய படமான பாரசைட் உள்ளிட்ட மொத்தம் 9 திரைப்படங்கள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன.

சிறந்த இயக்குனருக்கான போட்டியில் மார்ட்டிஸ் ஸ்கார்சசி , சாம் மென்டஸ், பாங் ஜூன் ஹோ ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். தென் கொரிய இயக்குனரான பாங் ஜூன் ஹோவுக்கு பாரசைட் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருது வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள், நடிகைகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறிது நேரத்தில் முழுப்பட்டியலும் வெளியாகிவிடும்.
இதனிடையே ஆஸ்கர் விழாவுக்கு வருகை தந்த நட்சத்திரங்களுக்காக விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளம் திடீரென பெய்த மழையில் நனைந்ததால் பலர் அடைக்கலம் தேடி ஓடினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments