தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்த இரண்டு சீனர்கள் மற்றும் இரண்டு தமிழர்கள் ஆகிய நால்வருக்கும் கொரோன வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மூவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள ஒருவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பதிவிட்டுள்ளார். மாநில சுகாதாரத்துறை முழு வீச்சில் கண்காணித்து வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
Comments