2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று, தாய் தற்கொலை முயற்சி ?

0 492

சேலம் மாவட்டம் மூலசெங்கோட்டில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் பெண் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

திவ்யா என்ற அந்தப் பெண்ணின் வீட்டருகே உள்ள விவசாயக் கிணற்றிலிருந்து அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று திவ்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவரது 3 வயது மகள் வர்னிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகாவையும் சடலங்களாக மீட்டனர். மனைவிக்கு வயிற்று வலி இருந்ததாகவும் அதனால் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் அவரது கணவர் இளையராஜா கூறுகிறார்.

ஆனால் கிணற்றுக்குள் தவறி விழுந்த வர்னிகாவை காப்பாற்றும் நோக்கில் பதற்றத்தில் இடுப்பில் வைத்திருந்த தன்சிகாவோடு தாம் கிணற்றில் குதித்துவிட்டதாக திவ்யா கூறுவதாகச் சொல்லப்படுகிறது. குழப்பம் நீடிக்கும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments