பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

0 794

டெல்லியில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தலைநகர் எங்கும் போலீசாரும் துணைராணுவப்படையினரும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஜாபர்பாத் பகுதியில் பைக்கில் ஹெல்மட்டால் முகம் மறைத்து வந்த இரண்டு பேர் அங்கிருந்த ஆயத்த ஆடைகள் கடையை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

பின்னர் தாறுமாறாக மேலும் இரண்டு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. இந்த காட்சி அங்கிருந்த கணகாணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments