யாராவது கேட்டை திறந்து பேட்டி அளித்தால் தலைப்புச் செய்தியா? - மு.க.ஸ்டாலின்

0 2929

யாராவது கேட்டை திறந்து வாசலில் நின்று பேட்டி அளித்தால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தலைப்புச் செய்தியாக வருவதாகவும் உண்மைச் செய்திகள் மறைக்கப்படுவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் ஜெயக்குமார் சரண் அடைந்திருப்பதாகக் கூறிய அவர் தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் என்று கூறி புரோக்கர் ஜெயக்குமார் சரணடைந்திருப்பதாகக் கூறியபோது சிரிப்பலை எழுந்தது. டி.என்.பி.எஸ்.சி. விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பதவிவிலக வேண்டும் என தி.மு.க. தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments