பாலாகோட் முகாமில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை

0 647

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் பாலாகோட் முகாமில் 27 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாலாகோட்டில் உள்ள அந்த அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசியதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் அதே முகாம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதாகவும், அங்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தலைவர் மசூத் அஸாரின் உறவினர் யூசுப் அஸார், 27 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அந்த பயிற்சி ஒருவாரத்தில் நிறைவடைய உள்ளதாகவும், அதன்பிறகு இந்தியாவுக்குள் ஊருருவும் செயலில் 27 பேரும் ஈடுபடலாம் எனவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments