சட்டவிரோத குடிநீர் - ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

0 313

சட்டவிரோதமாக செயல்படக்கூடிய குடிநீர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்களுக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சட்டவிரோதமாக 200-க்கும் மேற்பட்ட குடிநீர் நிறுவனங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

அப்போது, சட்டவிரோத குடிநீர் நிறுவனங்களை மூட பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல், அவற்றின் பட்டியலை மட்டும் அரசு தாக்கல் செய்துள்ளதாகவும், தண்ணீரின் அருமை அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments