கோடை காலத்தில் மின்சார தேவையை எளிதாக சமாளிக்க முடியும் - அமைச்சர் தங்கமணி

0 586

கோடை காலத்தில் மின்சார தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை எட்டினாலும் அதை எளிதாக சமாளிக்க முடியும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் பங்கேற்றார். அப்போது ஏமப்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின்நிலையத்தில் சோதனை ஓட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட துணமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கோடை காலத்தில் மின்தடை ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments