சீன விமான நிலையத்திலிருந்து எங்கு செல்வது என தெரியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்

0 541

கொரானா அச்சுறுத்தலை அடுத்து இந்தியா திரும்ப முயன்ற கேரளாவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவ,மாணவிகள் 21 பேர் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து விமானநிலையத்தில் தவித்து வருகின்றனர்.

இந்த 21 பேரும் டாலியன் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றனர். நோய் தொற்று பரவுவதை அடுத்து சிங்கப்பூர் வழியாக தாயகம் திரும்ப திட்டமிட்டு டிக்கெட் வாங்கிய  அவர்கள் இன்று குன்மிங் விமான நிலையத்திற்கு வந்தனர்.

போர்டிங் சமயத்தில், சீனாவில் இருந்து வரும் வெளிநாட்டவருக்கு சிங்கப்பூரில் அனுமதி இல்லை என்று கூறி அவர்கள் தடுக்கப்பட்டனர். ஹாஸ்டலுக்கு திரும்ப மாட்டோம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் எழுதி வாங்கியதால், அங்கும் செல்ல முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் விமான நிலையத்தில் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments