குழந்தைக்கு கிடைத்த 7 கோடியே 12 லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு

0 650

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது 1 வயதுக்கும் குறைவான மகனின் பெயரில் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 7 கோடியே 12 லட்சம் ரூபாய் (USD 1 million ) பரிசுத் தொகை விழுந்துள்ளது.

ஐக்கிய அரசு அமீரகம் நாட்டில் ரபேல் டிரா எனப்படும் மாதாந்திர லாட்டரி சீட்டில் கேரளாவை சேர்ந்த ரமீஸ் ரஹ்மான் (Ramees Rahman ) என்பவர் பங்கேற்று தனது மகன் முகமது சலாவின் பெயரில் லாட்டரி வாங்கியிருந்தார்.

இதற்கான முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டபோது, அதில் ரஹ்மான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 7 கோடியே 12 லட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அபுதாபியில் தற்போது அக்கவுன்டாக ரமீஸ் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். அவரது மகனுக்கு வரும் 13ம் தேதி ஒருவயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments