ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக உயர்த்த பரிசீலனை - பிபின் ராவத்

0 583

ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ராணுவ வீரர்களின் ஓய்வு பெறும் வயது 54ல் இருந்து 58 ஆக இருக்கும் பட்சத்தில், 18 முதல் 19 வயதில் பணிக்கு சேரும் வீரர்கள் 37 அல்லது 38 வயதில் ஓய்வு பெறுகின்றனர் என்று கூறினார்.

அவ்வாறு 38 வயதில் ஓய்வு பெற்றால் தங்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்படுவது, இலவச வீடு, சலுகை விலை சுகாதார திட்டம் , கல்வி உள்ளிட்ட சலுகைகளும் இழக்க நேரிடுகிறது என்றார்.

மேலும், 38 வயதில் ஓய்வு பெறும் ஒரு வீரர் தனது 17 ஆண்டுகால பணிக்கு 30 முதல் 32 ஆண்டுகள் ஓய்வூதியம் பெறுவதாக குறிப்பிட்ட பிபின் ராவத், அதே வீரர் 38 ஆண்டுகள் பணி செய்துவிட்டு 20 ஆண்டுகள் மட்டும் ஏன் ஓய்வூதியம் பெறக்கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments