விமானத்தில் இருந்து குதித்து வானில் நடைபயின்ற இளைஞர்

0 877

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து வானில் நடந்து காட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

image

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹமிஷ் பிரஸ்ஸட் என்ற இளைஞர் வானிலிருந்து குதித்து சாகசம் செய்வதில் அதீத விருப்பம் கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் சிறிய ரக விமானத்தில் சென்ற அவர், எல்சினோர் ஏரியின் மேற்பரப்பில் விமானம் சென்று கொண்டிருந்த போது, பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்தார்.

image

அவர் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த போதே, கண்ணாடியில் நடப்பது போன்று செய்து காட்டினார். மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருந்த நேரத்திலும் ஹமிஷின் குறும்பு நடை இணையத்தில் வெளியாகி உள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments