ரஜினி நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் புரியவில்லை - உதயநிதி ஸ்டாலின் !

0 786

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்துப் பெற்றார்.

மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க.வினர் நந்தனம் கலைக் கல்லூரி வாயிலில் மாணவர்களிடம் கையெழுத்து பெற்றனர். லயோலா கல்லூரி மாணவர்களிடம் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி தற்போது நடிகராக இருப்பதால் அவருக்கு அரசியல் புரியவில்லை என்றார். மாணவர்களை யாரும் போராட்டங்களுக்கு கட்டாயப்படுத்தவில்லை என்றும், அவர்கள் தன்னார்வத்துடனேயே பங்கேற்பதாகவும் ரஜினிக்கு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக தி.மு.க. நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின் 2 திருமணங்களிலும் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்துக்களை பெற்றார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments