சுவாமி ஐயப்பனின் திருவாபரணம் கடவுளுக்கு சொந்தமானதா? இல்லையா? உச்சநீதிமன்றம் கேள்வி

0 346

சபரிமலை கோவிலில், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களை, கேரள அரசே முன்வந்து எடுத்து, பிரத்யேகமாக பராமரிக்க வாய்ப்பும், வசதியும் இருக்கிறதா? அல்லது இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் உச்சநீதிமன்றம், இதுகுறித்து உரிய பதிலளிக்குமாறும், உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் கடவுளுக்குச் சொந்தமானவை என்றால், அதனை, பந்தள மன்னரின் குடும்ப வாரிசுகள் எப்படி சொந்தம் கொண்டாட இயலும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. கடவுளுக்கு சொந்தமான நகை என்றால், அதனை, உயர் அதிகாரி ஒருவரது முன்னிலையில், ஏன் கேரள மாநில அரசிடம் ஒப்படைக்க கூடாது என்றும், உச்சநீதிமன்றம் வினவியிருக்கிறது.

சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்களை நிர்வகிப்பது தொடர்பான பிரச்சினையில், பந்தள மன்னரது வாரிசுகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments