கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1,110 பாதுகாப்பு படை வீரர்கள் தற்கொலை

0 832

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் 1,110 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன.

2010 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில், ராணுவத்தில் 895 வீரர்களும், விமானப்படையில் 285 வீரர்களும், குறைந்தபட்சமாக கடற்படையில் 32 வீரர்களும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பணிச்சுமையால் வீரர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க கவுன்சிலிங், யோகா, தாராளமான விடுமுறை, உணவு, உடை, திருமணமானவர்களுக்கான தங்கும் வசதி என பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ராணுவத்தினரின் தற்கொலைகள் தொடர்வது குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தரவுகள் தற்கொலை தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments