நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

0 616

நியூசிலாந்த் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில், அதிரடி வீரர் பிருத்வி ஷா, சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்த், இந்தியா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் இம்மாதம் 21ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 8 மாத தடைக்கு ஆளாகி, பின்னர் மீண்ட பிருத்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். சுப்மான் கில், நவ்தீப் சைனி, இசாந்த் சர்மா, பூம்ராவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடைசி 20 ஓவர் போட்டியில் காலில் காயமடைந்த ரோஹித் சேர்க்கப்படவில்லை.  இதேபோல் நாளை தொடங்கும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரோஹித்துக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments