5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர் அச்சமடைய வேண்டாம் - அமைச்சர் வேண்டுகோள்

0 263

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் அச்சமடைய வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் அவர் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்வுப் பணியில் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மதிப்பிடவும் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

நடப்பு கல்வியாண்டு முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்பதால் வீண் அச்சம் தேவையில்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments