சீனாவில் இருந்து எங்கள் மாணவர்களை மீட்கமாட்டோம் - பாகிஸ்தான்

0 1514

சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்கவில்லை என்றார்.

ஒருவேளை பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு எங்கள் நாட்டினரை வுகான் நகரில் இருந்து மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் காட்டுத்தீ போல பல இடங்களுக்கும் பரவிவிடும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டுள்ளதால் தற்போது உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments