மிட்டாய் லவ் அட்டாக்..! பா.ஜ.க பிரமுகர் கொலை..! 5 புள்ளீங்கோஸ் சிக்கிய பின்னணி

0 1526

திருச்சியில் பாரதீய ஜனதா பிரமுகர் விஜய ரகு கொலை தொடர்பாக அவரது மகளை ஒரு தலையாக காதலித்து வந்த மிட்டாய் பாபு உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது மகளை பின் தொடர்ந்த இளைஞரை தட்டிக்கேட்டதால் நிகழ்ந்த கொடூர சம்பவம் குறித்து விவரிக்கின்றது.பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கடந்த 27 ஆம் தேதி மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். விஜயரகு கொலையில் மதச்சாயம் இல்லை என்று காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயரகுவை கொலை செய்த வழக்கில் பாபு என்கிற மிட்டாய் பாபு, ஹரிபிரசாத் ஆகியோரை தனிப்படை போலீசார் புதன்கிழமை சென்னையில் கைது செய்து திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ய உதவியதாக சுடர்வேந்தன்,சச்சின் சஞ்சய் ,யாசர் ஆகியோர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக புதிய காவல் ஆணையர் வரதராஜூ தெரிவித்தார்.

என்ன முன்விரோதம் என்று காவல் ஆணையர் பகிரங்கமாக அறிவிக்க மறுத்த நிலையில் இந்த கொலைச்சம்பவத்தின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விஜயரகுவின் மகளை பக்கத்து வீட்டில் வசித்து வந்த மிட்டாய் பாபு காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜயரகு, தனது மகளை சுற்றிவந்த மிட்டாய் பாபுவை விரட்டி உள்ளார். வேறு இடத்திற்கு இருப்பிடத்தை மாற்றிய பின்னரும் அவரது மகளை, மிட்டாய் பாபு ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கு விஜயரகு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளான் மிட்டாய் பாபு. சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் ஹரிபிரசாத், சுடர்வேந்தன்,சச்சின் சஞ்சய் ,யாசர் ஆகியோருடன் கூட்டாக சேர்ந்து விஜயரகுவை வெட்டி கொலை செய்ததாக அவன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மிட்டாய்பாபு உள்ளிட்ட ஐந்து பேரும் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் ஐந்து பேரையும் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்பெல்லாம் ஒரு தலை காதலில் விழுந்த புள்ளீங்கோக்கள், காதலி கிடைக்காத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள், பின்னர் காதலிக்க சம்மதிக்காத பெண்ணை கொலை செய்வதை வாடிக்கையாக்கினர், தற்போது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காதலியின் தந்தையை கொலைசெய்யும் விபரீத செயலை அரங்கேற்ற தொடங்கி இருப்பதற்கு சாட்சியாக நடந்திருக்கின்றது இந்த கொடூர சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments