மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

0 454

மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

image

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

image

அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து  தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை கடைபிடிக்க மாட்டேன் என்றும், சமய வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது என் கடமை என்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments