ஸ்ரீதேவியின் கணவர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்.. அஜீத் குறித்து கே.ராஜன் கிண்டல்

0 4152

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் மதிய சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்படுவதால்,  அஜீத்குமார் தொடர்ந்து அவருக்கு படங்கள் நடித்துக் கொடுப்பதாக தயாரிப்பாளர் கே.ராஜன் கிண்டல் அடித்துள்ளார்.

சென்னையில் நடந்த புறநகர் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ஸ்ரீதேவியின் கணவரின் தயாரிப்பில் நடிகர் அஜீத் தொடர்ந்து படங்கள் நடித்து கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், அஜீத்தை அறிமுகப்படுத்திய சோழா பொன்னுரங்கம் தற்போது மிகவும் நொடிந்த நிலையில் இருப்பதாகவும் அவருக்கு படம் நடித்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தன்னுடைய 2 வது படத்திலேயே சாதிய பிரச்சனைகளை சாடியதாக தெரிவித்த கே. பாக்யராஜ், தமிழ் சினிமாவில் சாதி பிரச்சனை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

தெலுங்கு படத்திலும் நடித்துவருவதால், தமிழ்.. தமிழ்.. என்று சொல்லி பிரிக்க வேண்டாம் என்று சுட்டிக்காட்டிய நடிகர் மன்சூரலிகான் தேசிய கீதம் பாடி விழாவை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments