கொரோனா வைரசை சீனா வீழ்த்துமென அதிபர் ஜி ஜின் பிங் அறிவிப்பு

0 558

கொரோனா வைரஸ் ஒரு பிசாசு என்றும் அதனை வீழ்த்துவோம் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

அந்நாட்டின் ஊகான் நகரில் பாதிப்பை தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று உச்சத்தை தொட இன்னும் 10 நாட்கள் ஆகும் என சீன சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரிடம், கொரோனா வைரஸ் ஒரு பிசாசு அந்த பிசாசை வீழ்த்துவோம் என்றும் கூறியதாக சீன அரசு நாளிதழ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments