பேருந்து, ஆட்டோ மோதி கிணற்றில் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

0 505

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி கிணற்றில் விழுந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும், சாலையோரம் உள்ள கிணற்றில் விழுந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.கிணற்றுக்குள் தலைகீழாக பேருந்து விழுந்ததால் பயணிகள் பலர் தண்ணீரில் மூழ்கினர்.
இதனால் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.32 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரண உதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments