சீனாவில் உள்ள இந்தியர்களின் நலன் காக்க ஏற்பாடு

0 374

சீனாவில் வசித்து வரும் இந்தியர்களின் உடல்நிலை மற்றும் நல்வாழ்வு குறித்து தூதரகம் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில், சீனாவில் வசித்து வரும் இந்தியர்கள் குறித்து பீஜிங்கில் உள்ள தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

ஊகான் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், சீன அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Our Embassy in Beijing is constantly checking on the health and well-being of the Indians in China. Please follow @EOIBeijing for more updates on the situation. https://t.co/IGOfQ7YPE9

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 26, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments