பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி

0 412

திண்டுக்கல் மாவட்டம் காக்காதோப்பில், பள்ளி பேருந்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகி, இரண்டு பேர் காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த சுஜித்லால் என்பவர் தனது ஓட்டுநருடன் மதுரை நோக்கி காரில் சென்றார். காக்காதோப்பு நான்கு வழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்றபோது, சாலையை கடப்பதற்காக குறுக்கே சென்ற தனியார் பள்ளி பேருந்தின் மீது பலமாக மோதி குலுங்கி நின்றது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து அதில் இருந்த இருவரும் காயமடைந்தனர். அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து மோதியதே விபத்துக்கான காரணம் என கூறப்படும் நிலையில், பள்ளி பேருந்தில் இருந்த மாணவர்களுக்கு நல்வாய்ப்பாக எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments