புலியிடம் சிக்கி நுலிழையில் உயிர் தப்பிய இளைஞர்

0 1309

மத்திய பிரதேசம் மாநிலத்தில், இளைஞர் ஒருவரை புலி தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா எல்லையில் உள்ள கைர்லாஞ்சி பகுதியில் திடீரென புலி ஒன்று புகுந்ததால் அச்சமடைந்த அப்பகுதியினர் அதனை துரத்த முயன்றனர்.

கூட்டம் சூழ்ந்ததால் மிரண்டு ஓடிய புலி அங்கிருந்த இளைஞர் ஒருவரை கீழே தள்ளி அவர் மீது புரண்டு தாக்கியது. அப்பொழுது அங்கு கூடியிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றது வீடியோவில் பதிவாகியுள்ளது. அடுத்த சில நொடிகளில் புலி ஓடிவிட அந்த நபர் உயிர் பிழைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments