குடியரசு தினத்தை சீர்குலைக்க சதித்திட்டம் - 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 310

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மூண்ட துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷே முகமது இயக்கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனான காரி யாசிர் என்பவன் 40 ராணுவ வீரர்களைக் கொன்ற புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவன் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர்.

காஷ்மீரில் குடியரசு தினத்தன்று தாக்குதல் தொடுக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளின் மறைவிடத்தை சுற்றி வளைததனர். நாள் முழுவதும் இருதரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இறுதியாக மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments