டொனால்டு டிரம்பின் வழக்கறிஞருக்கு Russian oligarch பெருமளவில் பணம் கொடுத்ததாக தகவல்

0 586

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வழக்கறிஞருக்கு ரஷ்ய தொழில்முனைவோர் அமைப்பான ரஷ்யன் ஒலிகார்ச் ((Russian oligarch)) பெருமளவில் பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனொல்டு டிரம்ப் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்த ஆபாச நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் ((Stormy Daniels)) அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இதனைவெளியிடாமல் இருப்பதற்காக டிரம்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ((Michael Cohen)) தனக்கு பெரும் தொகை தந்ததாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் ரஷ்ய தொழில்முனைவோர் அமைப்பான ரஷ்யன் ஒலிகார்ச்சை சேர்ந்த ஒரு நிறுவனம்  மைக்கேல் கோஹனுக்கு பெரும் தொகை கொடுத்ததாகவும், இந்தத் தொகை ஸ்ட்ரோமி டேனியல்சின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் நியூயார்க் டைம்ஸ், என்.பி.சி. நியூஸ் ஆகியவை தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT