கடையின் வெளியே இருந்த பால் பாக்கெட்டுகளை திருடிய 2 போலீஸார்

0 477

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் பால் பாக்கெட்டுகளை போலீஸார் இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலானதால், சம்பந்தப்பட்ட இரு போலீஸாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

நொய்டாவிலுள்ள கடை ஒன்றின் வெளியே கடந்த 19ம் தேதி இரவு வேனில் கொண்டு வரப்பட்ட பால் பாக்கெட்டுகள் கிரேடில் (crates) இறக்கி வைக்கப்பட்டிருந்தன.

அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு 2 போலீஸார் வந்தனர். அதில் ஒருவர் மட்டும் கீழிறங்கி வந்து, 2 பால் பாக்கெட்டுகளை எடுத்து சென்று, வாகனத்தில் இருந்த இன்னொரு போலீஸாரிடம் கொடுத்தார். பின்னர் 2 பேரும் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.சிசிடிவி காமராவில் பதிவான காட்சி வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்து, 2 போலீஸாரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments