மஹிந்திரா XUV300க்கு 5 ஸ்டார்...

குளோபல் என்கேப் எனப்படும் புதிய வாகன மதிப்பீட்டு சோதனையில், மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 சொகுசு கார் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த சோதனையின்போது, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில், அந்த கார், இரும்பு தடுப்பின் மீது மோதவிடப்பட்டது. கார் மோதும்போது ஏற்படும் சேதம், ஏர்பேக் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களின் இயக்கம், மோதிய வேகத்தில் வாகனத்தின் நிலைதடுமாறும் தன்மை ஆகியவை கணிக்கப்பட்டு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டது.
மேலும், பக்கவாட்டில் இருந்து வரும் வாகனம் மோதினால் ஆகும் சேதம் உள்ளிட்டவையும் கணிக்கப்படும். ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில், குளோபல் என்கேப் சோதனையில் மஹிந்திரா நிறுவனத்தின் XUV300 சொகுசு கார் 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும், விபத்தின்போது, குழந்தைகள் பாதுகாப்பிற்கான பிரிவில், 4 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
Comments