இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்ததால் நிகழ்ந்த விபத்து

0 753

புதுச்சேரி அருகே மூன்று பேருடன் சென்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அடுத்த நொடி அவ்வழியாக வந்த லாரி ஏறியதில் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடலூரை சேர்ந்த முருகன் என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் தூக்கனாம்பாக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். குருவிநத்தம் தூக்குபாலம் அருகே சாலையோரம் வந்த முருகன், இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றார்.

அப்போது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. அடுத்த ஒரு சில நொடிகளில் அவ்வழியாக எதிர்த்திசையில் வந்த லாரியின் பின்சக்கரம், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து கீழே விழுந்த முருகன் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments