செல்பி எடுக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம் - 9 பேர் பலி

0 1142

இந்தோனேசியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். சுமத்ரா தீவில் பெங்குலு மாகாணத்தில் ஆற்றை கடக்க பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உள்பட 30 பேர் பாலத்தில் நின்று ஆற்றுவெள்ளத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் அங்கு நின்றிருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படை வீரர்கள் 20 பேரை மீட்டனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான ஒருவரைத் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments