நடி ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெம்போ டிராவலர்

0 401

கோவை அவினாசி சாலையில் டெம்போ டிராவலர் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

பீளமேடு அருகே பன்மால் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டெம்போ டிராவலர் ஒன்றின் முன்புறத்தில் திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் முருகன், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு முன் பக்க பேனட்டை திறந்து புகை வந்த ஒயரை துண்டித்ததாகவும் இதனால் வாகனம் தீப்பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து சில நிமிடங்களில் வாகனம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Watch More : https://bit.ly/35lSHIO

Also Read :தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் கல்லூரி மாணவி மற்றும் தாய்க்கு கத்தி வெட்டு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments