அரசக் குடும்பத்தை மேகன் இழிவுபடுத்திவிட்டதாக அவரது தந்தை குற்றச்சாட்டு

0 400

இங்கிலாந்து அரசக் குடும்பத்தை மேகன் இழிவுப்படுத்திவிட்டதாக அவர் தந்தை தாமஸ் மார்க்ல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெர்மனியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இளவரசியாக வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் கனவு என்றும் ஆனால் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை பணத்திற்காக மேகன் தூக்கி எறிந்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஹாரி திருமணம் செய்துகொண்டபோது அரசக்குடும்பத்தின் ஒரு அங்கமாக இருந்து செயல்படுவேன் என மேகன் உறுதி ஏற்றதாக குறிப்பிட்டுள்ள தாமஸ் மார்க்ல், நீண்ட கால வரலாற்று சிறப்பு கொண்ட இங்கிலாந்து அரசக்குடும்பத்தை ஹாரியும் மேகனும் அழித்துக் கொண்டிருப்பதாக  குற்றஞ்சாட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments