நாடு முழுவதும் வழக்கத்தை விட 120 சதவிகிதம் மழை அதிகமாகப் பெய்துள்ளது

0 229

ஜனவரி 3ம் வார நிலவரப்படி நாடு முழுவதும் 120 விழுக்காடு மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழக்கத்தை விட இரண்டு முதல் 3 மடங்கு அதிகமான மழைப் பொழிவைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவை ஜனவரி மாதத்தில் 300 விழுக்காடுக்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெற்றுள்ளதாகவும், வடகிழக்கு மாநிலங்களில், வழக்கத்தை விட திரிபுராவில் 670 விழுக்காடு மழையும், மிசோரம் மாநிலத்தில் 295 மழையும் பெய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்படும் காற்று காரணமாக இந்திய துணைக் கண்டத்தில் மழைப்பொழிவு ஏற்பட்டதாகவும், இமயமலைகளில் மோதிய அந்தக் காற்றின் தாக்கத்தினால் வடக்கத்திய சமவெளிகள் மற்றும் கங்கைச் சமவெளியில் மழைய் பெய்வித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments