ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 466

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என்ற புதிய உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை வலியுறுத்திடவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற கொள்கை முடிவினை எடுக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments