வடமாநில தம்பதியின் 7 மாத குழந்தை கடத்தல் சிசிடிவி காட்சி வெளியீடு

0 451

சென்னையில் வட மாநில தம்பதியின் 7 மாத ஆண் குழந்தையை இளம்பெண் கடத்திசெல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

மெரினாவில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வரும் மகாராஷ்டிராவைச்சேர்ந்த ஜானே போஸ்லே - ரந்தோஷ் தம்பதியின், ஜான் என்ற 7 மாத ஆண் குழந்தையை, ஒரு மர்ம பெண் கடந்த 12 ம் தேதி சினிமாவில் நடிக்க வைப்பதாக பெற்றோரை ஏமாற்றி ராஜீவ்காந்தி மருத்துவமனை அழைத்துச்சென்று கடத்தினார். சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில் இளம்பெண் குழந்தையுடன் எழும்பூர் காந்தி இர்வின் சாலையை கடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. வழிநெடுகிலும் 25க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தப்பெண் இருமுறை குழந்தையுடன் மருத்துவமனை வந்து செல்வதும், ஆட்டோ ஒன்றில் ஏறிச்செல்வதும் பதிவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மர்மப்பெண்ணை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர், மேலும் காவல் கட்டுப்பாட்டு அறை 044-23452361 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments