இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர் பணியிடங்களுக்கு புதிதாக விண்ணப்பங்களை கோரியுள்ளது BCCI

0 327

இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணிக்கு  கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆடவர் சீனியர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான தேர்வாளர்கள் பணியிடத்தில் தலா 2 இடங்கள் காலியாக இருப்பதாகவும், மகளிர் கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் பணியிடத்தில் 5 இடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

image

ஆடவர் சீனியர் அணி தேர்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர் 7 டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது 30 முதல் தர போட்டிகளிலோ அல்லது 10 ஒருநாள்  மற்றும் 20 முதல் தர போட்டிகளிலோ விளையாடியிருக்க வேண்டும் எனவும், ஜூனியர் அணி தேர்வாளர்கள் பணிக்கு விண்ணப்பிப்போர், 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments