பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் நேரில் ஆஜராக உத்தரவு

0 246

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் பிப்ரவரி 22ந் தேதி ராகுல் நேரில் ஆஜராக ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் மொராதாபாத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அப்போதைய தலைவர் ராகுல்காந்தி, காவலாளி ஒரு திருடன் என்ற நிலைக்கு சென்றுவிட்டதாக மோடியை விமர்சித்தார்.

பிரதமரை விமர்சித்து அவதூறாக பேசியதாக ராகுல் மீது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அடுத்த மாதம் 22-ம் தேதி ராகுல் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments