2020-ல் 40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் சீனா

0 261

சீன விண்வெளி ஆய்வு மையம், நடப்பாண்டில்,  40க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த  திட்டமிட்டுள்ளது.

லாங் மார்ச் 5B, 7A, 8 போன்ற அதிக எடைகளை தாக்கிச் செல்லும் ராக்கெட்டுகளையும் சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. லாக் மார்ச் 7A என்ற ராக்கெட், ஐந்தரை டன் முதல், 7 டன் வரையிலான எடையை சுமந்துசென்று விண்ணில் நிலைநிறுத்தும் திறன் கொண்டவையாகும்.

image

இந்த ராக்கெட் முதல் 6 மாதத்திற்குள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நான்கரை டன் எடைகொண்ட செயற்கைக் கோளை சுமந்து செல்லும் லாக் மார்ச் 8 என்ற புதிய வகை ராக்கெட்டை இந்த ஆண்டில் விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments