சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் சென்னைவாசிகள்..!

0 422

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற 8 லட்சம் பேர் நாளையும் நாளை மறுநாளும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பொருட்டு சென்னை நகர எல்லைகளில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்து 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இவற்றை பயன்படுத்தி சென்னையில் இருந்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 837 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ரயில், விமானம், கார் மூலமாகவும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் 4 நாட்கள் பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் படிப்படியாக சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தின் பல இடங்களில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதன் அளவு நாளையும், நாளை மறுநாளும் பன்மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படும் நிலையில் பொதுமக்கள் வசதிக்காக முக்கிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் சென்னை நகர எல்லையில் போக்குவரத்து ஸ்தம்பிக்காத வகையில் ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments