ஆவேசமாக ஓடிய காளை - அதிர்ஷ்டவசமாக தப்பிய தாய், மகன்

0 799

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சிராவயலில் ஆவேசமாக ஓடிய காளை எதிரில் வந்த தாயையும் மகனையும் முட்டாமல் தாண்டிக் குதித்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புகழ் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டைக் காண மக்கள் குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம். இங்கு தொழு என அழைக்கப்படும் வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்து விடும் முன்பாகவே, வாகனங்களில் மாடுகளை அழைத்து வருவோர் அவற்றை வயல்வெளி, கண்மாய் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அவிழ்த்து விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதனால் பலர் காயம் அடைவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு வாகனத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று எதிரில் வந்த தாயையும் மகனையும் முட்டாமல் கடந்து சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments