பொங்கல் கொண்டாட உறவினர் வீட்டுக்கு வந்த புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை

0 812

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பொங்கல் கொண்டாட வந்த புதுமண தம்பதியர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேவராஜ் மற்றும் காயத்ரி ஆகியோர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரது வீட்டிலும் ஏற்காத நிலையில், பெங்களூரில் ஓட்டுநர் வேலைக்கு சென்ற தேவராஜ் அங்கேயே மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆரணி அருகே உள்ள சித்தி சந்திரா வீட்டுக்கு பொங்கல் கொண்டாட வந்த தம்பதியர் இருவரும், இன்று காலையில் வீட்டருகில் உள்ள மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments