24 மணி நேரமும் திரையரங்குகள், மால்கள் செயல்பட அரசு அனுமதி

0 433

வர்த்தக நகரான மும்பையில் குடியரசு தினம் முதல் 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதியளித்து மகாராஷ்ட்ரா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவகங்கள், மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இரவுபகலாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனப் பிரதிநிதிகளுடன் சுற்றுலா அமைச்சர் ஆதித்யா தாக்கரே நடத்திய ஆலோசனையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைப்புகள் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். மும்பையை வர்த்தகத்திற்கான சிறப்பான மையமாக மாற்ற கடந்த இருபது ஆண்டுகளாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த முடிவால் சுற்றுலாவுடன் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments