நாமக்கல் மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு

0 581

நாமக்கல் அருகே மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

குமாரபாளையம் காவேரி நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில், ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டால் தொழில் வளமும், செல்வமும் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

அதன்படி மாட்டு பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் பலர் ஒன்றிணைந்து கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 ஆகிய நோட்டுகளால் அலங்கரித்தும், அம்மனுக்கு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளால் மாலையும் அணிவித்திருந்தனர். மொத்தம் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை கொண்டு செய்திருந்த அலங்காரத்தை ஏராளமானவர்கள் கண்டு தரிசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments