பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்

0 426

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் மீது சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்று கண்டு பிடித்து அதை அழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள ரெய்சினா டயலாக் என்ற வருடாந்திர கருத்தரங்கில் பேசிய அவர், இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா எடுப்பதை போன்ற கடுமையான நடவடிக்கைளை இந்தியாவும் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

பயங்கரவாத த்தை ஊக்குவிக்கும் நாடுகள் இருக்கும் வரை அதன்அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை நீடிக்கும் என்று அவர் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். தாலிபான்களுடனான பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெனரல் பிபின் ராவத், ஆயுதங்களை வீசி விட்டு வரும் எவருடனும் பேசுவதில் தவறில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments