கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை-துரைமுருகன்

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பொதுமக்களுடன் பொங்கல் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி போனாலும் போகட்டும், அதனால் தங்களுக்கு நஷ்டமில்லை என துரைமுருகன் பதிலளித்தார்.
கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு கூறியதாகவும், ஆனால் தாம் பதிலையே கூறிவிட்டதாகவும் துரைமுருகன் கூறினார்.
Comments