8 வழிச்சாலை விவகாரம் : மத்திய அரசின் மனுமீது பதிலளிக்குமாறு அன்புமணி ராமதாஸ்க்கு உத்தரவு

0 369

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு மனு மீது பதிலளிக்குமாறு பாமகவைச் சேர்ந்த அன்புமணி உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம், விவசாயி கிருஷ்ணமூர்த்தி மற்றும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு இயக்குநர் சார்பிலும், மத்திய அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் மனுமீது 2 வாரத்தில் பதிலளிக்குமாறு கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments