தமிழக அரசின் லோக்ஆயுக்தாவை ரத்து செய்யக்கோரிய மனு மீது விசாரணை

0 239

தமிழக அரசு நிறைவேற்றிய லோக் ஆயுக்தா சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாகவும், ஊழலை ஒழிக்கும் வகையில் எந்த விதமான அதிகாரமும் இல்லை என்று கூறி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மற்ற மாநிலங்களில் எந்த மாதிரியான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன என்று கேட்டு அதனை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கும், அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments